SinhalaSriLankaEnglish (UK)

பணியாளருக்கானது

பணியாளருக்கானது (வேலையாள்)

"வேலையாள்" என்று கருதப்படுபவர் யார்?

"வேலையாள்" என்பது ஒப்பந்தமானது வெளிப்படையானதாயினும்சரி அல்லது உட்கிடையானதாயினும்சரி ஏதேனும் தன்மையில் அவருடைய தொழிலின் அல்லது வியாபாரத்தின் நோக்கத்திற்காக தொழில்தருநர் ஒருவருடன் ஒப்பந்தத்தைச் செய்துள்ள அல்லது தொழில்தருநர் ஒருவரின் ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரிகின்ற எவரேனுமொரு ஆள் என்று பொருள்படும். பயிலுநர் நிலையிலிருப்போரும் இதற்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.

எனினும், ஆயுதப் படைகளின் உறுப்பினர் அல்லது பொலிஸ் படையின் உறுப்பினர் என்ற தன்மையில் பணிபுரிகின்ற ஆளொருவர் "வேலையாள்" என்ற வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படமாட்டார். ஆயினும், கூறப்பட்ட படைகளில் சிவில் நிலையில் பணி புரிபவர்கள் வேலையாட்களாகக் கருதப்படுகின்றனர்.

நட்டஈட்டுக்காக விண்ணப்பிப்பதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான தேவைப்பாடுகள்

  1. விபத்தொன்று நிகழ்ந்திருத்தல் வேண்டும்
  2. அத்தகைய விபத்து தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
  3. மேலும், அத்தகைய விபத்து தொழிலில் ஈடுபட்டிருந்ததனால் ஏற்பட்டதாக இருத்தல் வேண்டும்.

நட்டஈட்டினைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள்

  1. விபத்தின் விளைவாக காயம் ஏற்பட்ட வேலையாள்
  2. விபத்தின் விளைவாக வேலையாள் மரணமடைந்தால் அவரில் தங்கியிருப்பவர்கள்.

நட்டஈட்டிற்காக விண்ணப்பித்தல்

விபத்தினால் காயமேற்பட்ட வேலையாள் அல்லது விபத்தின் விளைவாக வேலையாள் மரணமடைந்தால் அவரில் தங்கியிருப்பவர்கள் விபத்து நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இதனகத்து பின்னர் வழங்கப்பட்டுள்ள படிவங்களைப் பயன்படுத்தி வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு கோரலொன்றைச் செய்தல் வேண்டும்.

மரணத்தை ஏற்படுத்தாத விபத்தின்போது "ஏ" படிவத்துடன் தகைமையுள்ள மருத்துவரின் மருத்துவச் சான்றிதழ். ("எஸ்" படிவம்)

மரணத்தை ஏற்படுத்தும் விபத்தின்போது "பி" படிவத்துடன் மரணச் சான்றிதழும் சமர்ப்பித்தல் வேண்டும்

முக்கிய தொடர்புகள்

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
www.labourmin.gov.lk
இலங்கை தொழில் திணைக்களம்
www.labourdept.gov.lk