SinhalaSriLankaEnglish (UK)

தொழில் தருநர்களுக்காக

"தொழில்தருநர்" என்று கருதப்படுபவர் யார்?

"தொழில்தருநர்" என்பது இலங்கைக் குடியரசு மற்றும் கூட்டிணைக்கப்பட்டதாயினும்சரி அல்லது கூட்டிணைக்கப்படாததாயினும்சரி ஏதேனும் அமைப்பின் ஆட்கள் அத்துடன் தொழில்தருநரொருவரினதும் மரபுரிமையாளர்களினதும் எவரேனும் முகாமை முகவர் ஆகியோரை உள்ளடக்குகின்றது. இதன்படி, ஏனைய தொழிற் சட்டங்களைப் போலல்லாது வேலையாளர் நட்டஈட்டுச் சட்டத்தை அரச துறைப் பணியாளர்களுக்கும் பிரயோகிக்க முடியும்.

தொழில்தருநர் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கான அடிப்படைகள்

பணியாளர் ஒருவரின் (வேலையாள்) நட்டஈட்டுக் கோரலொன்றில் பின்வருகின்ற அடிப்படைகளின்பேரில் தொழில்தருநர் பொறுப்பலிருந்து விடுபடமுடியும்.

  1. மூன்று நாட்களை விஞ்சாத காலப்பகுதியொன்றினைக்கொண்ட வேலையாளின் இயலாமையை விளைவாக்குகின்ற ஏதேனும் காயம் தொடர்பில். உதாரணமாக சிறிய காயமொன்று. இது மருத்துவ அறிக்கைகளில் தங்கியிருக்கின்றது.
  2. விபத்தொன்றில் மரணம் ஏற்படாது, ஏற்பட்ட ஏதேனும் காயம் தொடர்பில் பின்வருவனவற்றிற்கு நேரடியாக உட்பட்டிருந்தால்.
    • வேலையாள் விபத்து ஏற்படும் நேரத்தில் குடி போதையில் (மதுபானம் அல்லது போதைப்பொருள்) இருந்திருத்தல்.
    • பாதுகாப்பு நோக்கத்திற்காக தொழில்தருநரினால் தெளிவாக வழங்கப்பட்டிருந்த கட்டளையொன்றிற்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமை.
    • பாதுகாப்பு நோக்கத்திற்காக தொழில்தருநரினால் வழங்கப்பட்டிருந்த ஏதேனும் பாதுகாப்பு அல்லது ஏனைய உபகரணங்களை வேண்டுமென்றே புறக்கணித்தல்.

விபத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்

மரணத்தை ஏற்படுத்தாத விபத்தொன்று ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அவ்விபத்தின் பொறுப்பை தொழில் தருநர் ஏற்றுக்கொண்டால், பணியாளருக்கு உரிய நட்டஈட்டுப் பணத்தைச் செலுத்தியதன் பின்னர், அந்த உடன்படிக்கைப் படிவத்தை ("ஜி" படிவம்) வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு அனுப்புதல் வேண்டும். வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அந்த உடன்படிக்கைப் படிவத்தை பதிவுசெய்வார். இது, சட்ட நடவடிக்கைகள் எடுப்பதனைத் தடுக்கின்றது.

தொழில்தருநர், சிறு விபத்துகள் (மூன்று (3) நாட்களுக்கு குறைவாக இருக்கின்றவை) தவிர்ந்த ஏனைய அனைத்து விபத்துகள் தொடர்பாக விபத்து ஏற்பட்டு 14 நாட்களுக்குள் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு அறிவித்தல் வேண்டும். இந்நோக்கத்திற்காக "கியு" படிவம் பயன்படுத்தப்படுதல் வேண்டும். வேலையாள் மரணமடைகின்ற சந்தர்ப்பத்தில், இது பற்றி 30 நாட்களுக்குள் "ஓ" படிவத்தின் மூலம் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறுவது, தொழில்தருநரை குற்றவாளியாகக் காண்பதனை விளைவாக்குவதுடன், அபராதம் செலுத்துவதற்கும் உட்படுத்தும். மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், நட்டஈடானது, ஆணையாளரிடம் வைப்புச் செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன், மனைவிக்கோ அல்லது தங்கியிருப்போருக்கோ நேரடியாகச் செலுத்தப்படுதலாகாது. நட்டஈடு வைப்புச்செய்யப்படுகின்றபோது, தங்கியிருப்போருக்கிடையில் அதனைப் பங்கீடுசெய்வதற்கு ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார்.

தொழில்தருநரினால் பணியாளர்கள் (வேலையாட்கள்) காப்புறுதி செய்யப்படுதல்

இலங்கைச் சட்டத்தின்டி தொழில்தருநர்கள் தமது பணியாளர்களைக் காப்புறுதி செய்வது கட்டாயமல்ல. அவ்வாறு காப்புறுதி செய்யப்பட்டால், விபத்து ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், வேலையாட்களுக்கான நட்டஈட்டை அத்தகைய காப்புறுதியினூடகச் செலுத்தமுடியுமாகையால் நட்டஈட்டினைச் செலுத்துவது இலகுவாகின்றது. அவ்வாறு காப்புறுதி செய்யப்பட்டால், வேலையாளுக்குப் பொறுப்பான காப்புறுதிக்கான முழுக் காப்புறுதி உதவுதொகையும் தொழில்தருநரினால் செலுத்தப்படுதல் வேண்டும்.

முக்கிய தொடர்புகள்

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
www.labourmin.gov.lk
இலங்கை தொழில் திணைக்களம்
www.labourdept.gov.lk