SinhalaSriLankaEnglish (UK)

நட்டஈட்டைக் கணிப்பிடுதல்

வேலையாளரின் நட்டஈட்டைத் தீர்மானிக்கையில், மாத வேதனத்தின் விகிதம் மற்றும் இயலாமையின் அளவு அல்லது மட்டத்தின் அடிப்படையில் பின்வரும் அட்டவணையின்படி நட்டஈடு கணக்கிடப்படுகின்றது.

மாத சம்பளம்

மாதச் சம்பளம் (i)
வேலையாளரின் மரணத்தின்போது
(ii)
வேலையாளரின் நிரந்தரமான, முழுமையான இயலாமையின்போது
(100% இயலாமையின்போது)
(iii)
வேலையாளரின் தற்காலிகமாக இயலாமையின்போது நட்டஈடாக அரை மாதக் கொடுப்பனவு
(15 நாட்களுக்கு)
ரூபா. ரூபா. ரூபா. ரூபா.
0-2 - 2,500 181,665.00 196,083.80 1,320.00
2,501 - 5,000 258,640.80 295,075.00 1,804.00
5,001 - 7,500 330,968.00 351,461.00 2,186.80
7,501 - 10,000 407,427.90 444,494.60 2,733.50
10,001 - 12,500 478,495.60 519,593.80 3,231.80
12,501 - 15,000 522,495.60 550,000.00 3,561.00
15,001 - 17,500 549,631.50 550,000.00 3,890.70
17,501 - 20,000 550,000.00 550,000.00 4,221.80
20,000 - அல்லது அதற்கு மேல் 550,000.00 550,000.00 5,500.00


மரணம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள வேதனத்திற்கு நேராகத் தெரிவிக்கப்படுகின்ற நட்டஈட்டுப் பணம் ஆணையாளரினூடாகத் தங்கியிருப்பவர்களுக்கு செலுத்தப்படுகின்றது. ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வேதனத்திற்கு நேராகத் தெரிவிக்கப்படுகின்ற நட்டஈட்டுப் பணம் இயலாமையின் அளவிற்கு அமைவாக செலுத்தப்படுகின்றது. மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள தொகை 100% இயலாமைக்கானது. ஆகவே, உரிய தொகையானது, மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இயலாமையின் அளவின்படி (விகிதம்) கணிக்கப்பட வேண்டியிருக்கின்றது. தற்காலிக இயலாமையின்போது மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வேதனத்திற்கு நேராகத் தெரிவிக்கப்படுகின்ற நட்டஈட்டுப் பணம், ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகளுக்கமைவாக இயலாமை முடிவுறும் வரை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் செலுத்தப்படும்.

முக்கிய தொடர்புகள்

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
www.labourmin.gov.lk
இலங்கை தொழில் திணைக்களம்
www.labourdept.gov.lk